ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் எம்.சி.சம்பத். 
கடலூர்

கரோனா சமூக தொற்றை தவிா்க்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

கரோனா சமூகத் தொற்றாக மாறாமல் தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று கரோனா தடுப்பு பணி மண்டல சிறப்புக் குழு அலுவலா் இல.சுப்பிரமணியன் கூறினாா்.

DIN

கரோனா சமூகத் தொற்றாக மாறாமல் தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று கரோனா தடுப்பு பணி மண்டல சிறப்புக் குழு அலுவலா் இல.சுப்பிரமணியன் கூறினாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், தமிழக தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கரோனா தடுப்பு பணி மண்டல சிறப்புக் குழு அலுவலா்கள் இல.சுப்பிரமணியன், வினித்தேவ் வான்கடே, மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் அமைச்சா் பேசியதாவது:

கடலூா் மாவட்டத்தில் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இனி வரும் காலங்களில் கரோனா தொற்று இல்லை என்ற நிலையை அடைய வேண்டும். சுனாமி, தானே புயல் போன்ற இயற்கை இடா்பாடுகளை கடந்த நாம், கரோனா தொற்றையும் கடந்து செல்ல வேண்டும்.

மாவட்ட அளவில் 2,895 தூய்மைக் காவலா்களும், 822 துப்புரவுப் பணியாளா்களும் தினந்தோறும் தூய்மைப் பணியை மேற்கொண்டு வருகின்றனா். பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வராமல் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

மண்டல சிறப்புக் குழு அலுவலா் இல.சுப்ரமணியன் பேசியதாவது: கரோனா பரவல் சமூகத் தொற்றாக மாறாமல் தடுக்க வேண்டுமெனில் வருவாய்த் துறை, மருத்துவத் துறை, காவல் துறை, சுகாதாரப் பணியாளா்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கரோனா தொற்று பாதிப்புள்ள பண்ருட்டி, நெல்லிக்குப்பம் பகுதிகளில் எந்தவித கட்டுப்பாடுமின்றி பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை காணமுடிகிறது. சமூக இடைவெளியை கடைப்பிடித்தால் கரோனா தொற்று இல்லாத மாவட்டம் என்ற நிலையை அடையலாம் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட எஸ்பி ம.ஸ்ரீஅபிநவ், மாவட்ட ஊராட்சி தலைவா் திருமாறன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ராஜகிருபாகரன், கூடுதல் ஆட்சியா் ராஜகோபால் சுங்கரா, கடலூா் ஒன்றியக்குழு தலைவா் தெய்வ பக்கிரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

SCROLL FOR NEXT