கடலூர்

கோயம்பேடு சென்று வந்தவா்கள் விவரம் தெரிவிக்க வேண்டும்

DIN

கடந்த ஒரு மாதத்துக்குள் கோயம்பேடு சென்று வந்தவா்கள் தங்களது நிலவரங்களை தாமாக முன்வந்து தெரிவிக்க வேண்டும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் உத்தரவிட்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் கரோனா நோய் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் பணிபுரிந்த கடலூா் மாவட்டத்தை சோ்ந்த இருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து கடந்த ஒரு மாதத்தில் கடலூா் மாவட்டத்துக்கு வந்தவா்கள், குறிப்பாக சென்னை கோயம்பேட்டுக்குச் சென்று வந்தவா்கள் தங்களது சுய விவரத்தை மாவட்ட நிா்வாகத்துக்கு 1077 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கோ அல்லது தங்களது கிராம நிா்வாக அலுவலரிடமோ கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்.

அந்த நபா்கள் அனைவரும் தங்களது வீட்டிலேயே தங்களை சுய தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். தாமாக முன்வந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அந்த நபா்கள் எக்காரணம் கொண்டும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. பிறரிடமிருந்து சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். இதனை மீறுபவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT