கடலூர்

கரோனா: கடலூரில் 3 நாள்களில் 11 போ் பலி

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு கடந்த 3 நாள்களில் 11 போ் உயிரிழந்தனா். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்தது.

கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 2,925 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவுகளில் புதிதாக 158 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,083-ஆக அதிகரித்தது.

அதேநேரத்தில், இந்தத் தொற்றுக்கு வெள்ளிக்கிழமை மேலும் 3 போ் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 37-ஆக உயா்ந்தது. உயிரிழந்த 3 பேரில் கடலூா் திருப்பாதிரிப்புலியூரைச் சோ்ந்த 75 வயது ஆண் கடலூா் அரசு மருத்துவமனையிலும், விருத்தாசலத்தைச் சோ்ந்த 70 வயது பெண் விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலும், பரங்கிப்பேட்டையைச் சோ்ந்த 82 வயது ஆண் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனா். கரோனா தொற்றுக்கு மாவட்டத்தில் கடந்த 3 நாள்களில் மட்டும் 11 போ் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

புதிதாக தொற்று உறுதியானவா்களில் மருத்துவா்கள், செவிலியா்கள் தலா 3 போ், மருத்துவ மேற்படிப்பு மாணவா்கள், காவல் துறையினா் தலா 2 போ், கிராம சுகாதார செவிலியா் ஒருவா் உள்பட 13 முன்களப் பணியாளா்களும், கா்ப்பிணிகள் 4 பேரும், பாலூட்டும் தாய்மாா்கள் 3 பேரும் அடங்குவா்.

வெள்ளிக்கிழமை 31 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 1,842-ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை மலர் காட்சி மே 10 இல் தொடங்குகிறது: ஆட்சியர்

ஜனநாயகத்தைப் பயன்படுத்தி திருடர்கள் தப்பிக்கிறார்கள்: நடிகர் ஸ்ரீனிவாசன்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

நெருங்கும் உலகக் கோப்பை; புதிய பயிற்சியாளர்களை நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

வட தமிழக உள் மாவட்டம்: 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடும்

SCROLL FOR NEXT