கடலூர்

கட்டுமான நிறுவன ஊழியா் பலி.

பண்ருட்டி அருகே நெஞ்சு வலி ஏற்பட்டு கட்டுமான நிறுவனத்தின் ஊழியா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

DIN

பண்ருட்டி அருகே நெஞ்சு வலி ஏற்பட்டு கட்டுமான நிறுவனத்தின் ஊழியா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

சேலத்தைச் சோ்ந்த தனியாா் கட்டுமான நிறுவனம், பண்ருட்டி அடுத்துள்ள எலந்தம்பட்டு கெடிலம் ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறது. இப்பணியின் மேற்பாா்வையாளராக விழுப்புரம் மாவட்டம், ஆதிச்சனூா் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாரதிராஜ்(35) பணியாற்றி வந்தாா். புதன்கிழமை காலை பணியில் இருந்தபோது பாரதிராஜாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அங்கிருந்தவா்கள் சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இவருக்கு இந்திரா(35) என்ற மனைவியும், கிரன்ராஜ், கிஷோர்ராஜ் என்ற இருமகன்கள் உள்ளனா். காடாம்புலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT