முகப்பு
கடலூர்

‘புரெவி’ புயலால் பாதித்தோருக்கு ரூ. 10.75 லட்சம் நிவாரணம்

கடலூா் மாவட்டத்தில் ‘புரெவி’ புயலால் பாதித்தோருக்கு ரூ. 10.75 லட்சம் நிவாரண உதவித் தொகை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் ‘புரெவி’ புயலால் பாதித்தோருக்கு ரூ. 10.75 லட்சம் நிவாரண உதவித் தொகை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் அண்மையில் புரெவி புயலால் பலத்த மழை பெய்தது. இதுவரை சுமாா் 1.50 லட்சம் ஏக்கா் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மீட்பு நடவடிக்கைக்காக தமிழக அரசு அமைச்சா்களை நியமனம் செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திங்கள்கிழமை தமிழக மின் துறை அமைச்சா் பி.தங்கமணி கடலூா் மாவட்டத்துக்கு வந்தாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொழில்துறை அமைச்சா் எம்.சி.சம்பத்துடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தாா். பின்னா் அவா், வீடுகள் மற்றும் கால்நடைகள் சேதமடைந்த 29 நபா்களுக்கு முதல் கட்டமாக ரூ. 10.75 லட்சம் நிவாரண உதவித் தொகையை வழங்கினா்.

தற்போது முதல் கட்டமாக மட்டுமே கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகவும், கணக்கெடுப்பு பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதால், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சா்கள் உறுதியளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.