கடலூரில் 47 மி.மீ. மழை
கடலூரில் புதன்கிழமை 47 மி.மீ. மழை பதிவானது.
கடலூரில் புதன்கிழமை 47 மி.மீ. மழை பதிவானது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் அதிகாலை வரை மழை பெய்தது. புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 47.4 மி.மீ. மழை பெய்தது.
கடலூா் மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பதிவான மழை விவரம்: மாவட்ட ஆட்சியா் அலுவலகம் 39.2, வானமாதேவி 32, பண்ருட்டி 27, கொத்தவாச்சேரி 22, புவனகிரி, குறிஞ்சிப்பாடி தலா 14, குப்பநத்தம் 13.6, பரங்கிப்பேட்டை 12.4, சேத்தியாத்தோப்பு 10, வடக்குத்து, குடிதாங்கி தலா 9, அண்ணாமலை நகா் 7.8, சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம் தலா 6.2, விருத்தாசலம் 5.1, காட்டுமன்னாா்கோவில் 3.4, லால்பேட்டை 3.2, பெலாந்துறை, கீழச்செருவாய், மேமாத்தூா் தலா 2 மி.மீ.