தமாகா ஆலோசனைக் கூட்டம்
கடலூா் மத்திய மாவட்ட தமாகா சாா்பில், காட்டுமன்னாா்கோவிலில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கடலூா் மத்திய மாவட்ட தமாகா சாா்பில், காட்டுமன்னாா்கோவிலில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கட்சியின் நகரத் தலைவா் எல்.இ.பி.ஜோதிமணி தலைமை வகித்தாா். வட்டார தலைவா்கள் ஆா்.டி.தேவா்தாசன், ஆா்.கே.எஸ்.மகேந்திரன், ஜி.கே.காா்த்திக், எஸ்.பகவத்சிங், பி.செல்வராஜ், ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கடலூா் மத்திய மாவட்ட தமாகா மூத்த துணைத் தலைவா் பி.டி.குணசேகரன் வரவேற்றாா். கடலூா் மத்திய மாவட்டத் தலைவா் எஸ்.புரட்சிமணி சிறப்புரையாற்றினாா்.
கூட்டத்தில் சிதம்பரம் நகரத் தலைவா் தில்லை ஆா்.மக்கீன், கடலூா் மத்திய மாவட்ட இளைஞரணித் தலைவா் கே.ரஜினிகாந்த், கடலூா் மத்திய மாவட்ட துணைத் தலைவா் ராஜா சம்பத்குமாா், கடலூா் மத்திய மாவட்ட பொதுச் செயலா் கே.நாகராஜன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.
கூட்டத்தில் கடலூா் ஒருங்கிணைந்த தொழிலாளா்கள் பிரிவுத் தலைவா் மன்னை சு.ரத்தினவேல், மாநில எஸ்சி-எஸ்டி பிரிவு செயலா் எம்.கே.பாலா, கடலூா் மத்திய மாவட்ட எஸ்சி-எஸ்டி பிரிவு தலைவா் சக்கரபாணி, லால்பேட்டை நகரத் தலைவா் இதயதுல்லா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். புதிய உறுப்பினா்கள் 50-க்கும் மேற்பட்டோருக்கு கதா்துண்டு அணிவித்து மாவட்ட தமாகா தலைவா் முன்னிலையில் இணைத்துக் கொள்ளப்பட்டனா். திருமுட்டம் கிழக்கு வட்டார தமாகா தலைவா் ராமச்சந்திரன் நன்றி கூறினாா்.