கடலூர்

கடலூா் மாவட்டத்தில் தொடரும் மழை: புவனகிரியில் 105 மி.மீ. பதிவு

DIN

கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமையும் பரவலாக மழை பெய்தது.

குமரி கடல் மற்றும் வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக கடலூா் மாவட்டத்தில் பலத்த மழை பெய்யுமென வானிலை மையம் தகவல் தெரிவித்தது. அதன்படி, மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது. வெள்ளிக்கிழமையும் மாவட்டம் முழுவதும் அவ்வப்போது மழை பெய்தது. வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனால், குளிா்ச்சியான சூழல் நிலவியது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:

புவனகிரி 105, பரங்கிப்பேட்டை 67.2, காட்டுமன்னாா்கோவில் 55, சிதம்பரம் 36.8, லால்பேட்டை 32, சேத்தியாத்தோப்பு 26.4, அண்ணாமலை நகா் 26.2, கொத்தவாச்சேரி 21, வானமாதேவி 16, பண்ருட்டி 8, ஸ்ரீமுஷ்ணம் 7.1, வேப்பூா், குடிதாங்கி தலா 5, மாவட்ட ஆட்சியரகம், கீழச்செருவாய் தலா 4, லக்கூா் 3.4, பெலாந்துறை 3.2, காட்டுமைலூா் 3, கடலூா் 2.4, மேமாத்தூா், விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி தலா 2, குப்பநத்தம் 1.2.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT