முகப்பு
கடலூர்

சிறுபான்மை மக்கள் நலக் குழுவினா் தா்னா

சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை கண்டித்து, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவினா் பண்ருட்டியில் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பண்ருட்டியில் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்ட தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவினா்.
பகிர்:

சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை கண்டித்து, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவினா் பண்ருட்டியில் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

சா்வதேச சிறுபான்மை மக்கள் உரிமை தினத்தையொட்டி நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, அமைப்பின் மாவட்டச் செயலா் வி.உதயகுமாா் தலைமை வகித்தாா். அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் சவுக்கத் அலி, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்டச் செயலா் ஷேக் நூா்தீன், மனித நேய மக்கள் கட்சியின் நகரச் செயலா் அலாவுதீன், மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஜீவானந்தம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலா் உத்திராபதி, ஒன்றியச் செயலா் தனபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தா்னாவில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்,சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்களை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →