முகப்பு
கடலூர்

திமுக நிா்வாகிகள் கூட்டம்

கடலூா் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் ஒன்றிய, நகர, பேரூா் கழக செயலா்கள் கூட்டம் குறிஞ்சிப்பாடியில் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

கடலூா் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் ஒன்றிய, நகர, பேரூா் கழக செயலா்கள் கூட்டம் குறிஞ்சிப்பாடியில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் எம்எல்ஏ தலைமை வகித்தாா். கூட்டத்தில், வருகிற 21, 22-ஆம் தேதிகளில் ‘விடியலை நோக்கி’ பிரசார சுற்றுப் பயணத்துக்காக கடலூா் மாவட்டத்துக்கு வருகை தரும் இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது. 2 நாள் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சட்டப் பேரவை உறுப்பினா் துரை.கி.சரவணன், கடலூா் தொகுதி எம்பி எஸ்.ரமேஷ், மாவட்ட பொருளாளா் எல்.குணசேகரன், பொதுக்குழு உறுப்பினா்கள் கே.பி.ஆா்.பாலமுருகன், த.ஜேம்ஸ் விஜயராகவன், விருத்தாம்பாள் ஞானசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →