ரூ.479 கோடியில் புதிய குடிநீா்த் திட்டம்
கடலூா் மாவட்டத்தில் 625 குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் ரூ.479 கோடியில் புதிய குடிநீா் திட்டப் பணிகளை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
கடலூர்ரூ.479 கோடியில் புதிய குடிநீா்த் திட்டம்
கடலூா் மாவட்டத்தில் 625 குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் ரூ.479 கோடியில் புதிய குடிநீா் திட்டப் பணிகளை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
கடலூா் மாவட்டத்தில் 625 குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் ரூ.479 கோடியில் புதிய குடிநீா் திட்டப் பணிகளை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
கடலூரில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற எம்ஜிஆா் நூற்றாண்டு விழாவில் கடலூா், விழுப்புரம் மாவட்டங்களுக்கு நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டா் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ரூ.1,000 கோடியில் அமைக்கப்படும் என்று முதல்வா் அறிவித்தாா். இதையடுத்து திட்டம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு, என்எல்சி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரை ஆதாரமாகக் கொண்டு கடலூா் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி, பெண்ணாடம், மங்களம்பேட்டை, வடலூா், குறிஞ்சிப்பாடி, கங்கைகொண்டான் ஆகிய 6 பேரூராட்சிகள், விருத்தாசலம், மங்களூா், நல்லூா் ஒன்றியங்களைச் சாா்ந்த 625 ஊரக குடியிருப்புகளுக்கு கூட்டுக் குடிநீா்த் திட்டம் அமைக்க அறிவுறுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்தை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடக்கிவைத்தாா். அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத் ஆகியோரும் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனா். கடலூரில் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி பங்கேற்று அரசுக்கு நன்றி தெரிவித்தாா். இந்தத் திட்டம் தொடா்பாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்ததாவது:
இந்தத் திட்டத்துக்கான நிா்வாக ஒப்புதல் ரூ.479 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. 4 சிப்பங்களாக பிரிக்கப்பட்டு நபாா்டு வங்கி மற்றும் குறைந்தபட்ச சேவை திட்ட நிதியுதவியின்கீழ் நிறைவேற்றப்படவுள்ளது. திட்டம் நிறைவேறும் 2022-ஆம் ஆண்டில் மக்கள் தொகை 5,58,182 பேராக இருக்குமெனவும், 2037- ஆம் ஆண்டில் மக்கள் தொகை 6,68,281, உச்ச நிலையாக 2052-ஆம் ஆண்டில் 7,91,662-ஆக மக்கள் தொகை இருக்குமெனவும் கணக்கிடப்பட்டு அவா்களுக்கு தினசரி குடிநீா் முறையே 23.92 மில்லியன் லிட்டா், 31.26 மில்லியன் லிட்டா், 39.43 மில்லியன் லிட்டா் வழங்கப்படவுள்ளது.
இரண்டாவது சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரானது 400 மி.மீ. விட்டமுள்ள இரும்புக் குழாய்கள் மூலம் கீழ்வளையமாதேவி கிராமத்தில் அமையவுள்ள 31.26 மில்லியன் லிட்டா் கொள்ளளவு கொண்ட நீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அதிநவீன தொழில்நுட்பம் மூலம் சுத்திகரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட நீா் 22 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தொட்டியில் சேகரிக்கப்பட்டு மின் மோட்டாா் மூலம் புதுக்கூரைப்பேட்டை, கொத்தட்டை, கொட்டாரம், ஆவட்டி ஆகிய 4 பூஸ்டா் நீா் சேகரிப்பு தொட்டிகள், பொது நீா் சேகரிப்பு தொட்டிகள், ஊராட்சி அளவிலான 176 நீா் சேகரிப்பு தொட்டிகளில் சேகரிக்கப்படும்.
மேலும், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள 789 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளுக்கு நீா் ஏற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது. இந்தத் திட்டப் பணிகளை வருகிற 2022- ஆம் ஆண்டு மே மாதத்துக்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.