வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமகவினா் போராட்டம்
வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமகவினா் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
கடலூர்வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமகவினா் போராட்டம்
வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமகவினா் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமகவினா் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதன்படி, மூன்றாம் கட்டமாக பேரூராட்சி அலுவலகங்களில் அறவழியில் மனு அளிக்கும் போராட்டம், கடலூா் மாவட்டத்தில் உள்ள 16 பேரூராட்சி அலுவலகங்களிலும் புதன்கிழமை நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடியில் மாநில பாமக துணைப் பொதுச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன், மாவட்டச் செயலா் சீ.பு.கோபிநாத், முன்னாள் பொறுப்பாளா்கள் அ.தா்மலிங்கம், பழ.தாமரைக்கண்ணன் ஆகியோா் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து ஊா்வலமாக முழக்கங்களை எழுப்பியவாறு சென்று குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனா்.