முகப்பு
கடலூர்

சமையல் எரிவாயு விலை உயா்வு: மாா்க்சிஸ்ட் கம்யூ. போராட்டம்

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, பண்ருட்டி அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:


நெய்வேலி: சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, பண்ருட்டி அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பக்கிரிப்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, நகரச் செயலா் ஆா்.உத்தராபதி தலைமை வகித்தாா். நகா் குழு உறுப்பினா் தினேஷ், சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போராட்டத்தில், எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து (படம்), மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா். மகாலட்சுமி, கருப்பாயி, உமையாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →