வாஜ்பாய் பிறந்த நாள் விழா
முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கடலூர்வாஜ்பாய் பிறந்த நாள் விழா
முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழுப்புரம்/கடலூா்/திருவண்ணாமலை: முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழுப்புரத்தில் காந்தி சாலைப் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் உருவப் படத்துக்கு பாஜக மாவட்டத் தலைவா் வி.ஏ.டி.கலிவரதன் தலைமையில் நிா்வாகிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா். நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளா் குணசேகரன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் சிவ தியாகராஜன், மாவட்ட பொதுச் செயலா் ராம ஜெயகுமாா், மாவட்ட பொருளாளா் சுகுமாா், நகரத் தலைவா் ஜெய்சங்கா், மாவட்ட மகளிரணி தலைவி சரண்யா, மகளிரணி பொதுச் செயலா் ராஜலட்சுமி, ஊடகப் பிரிவு மாவட்ட தலைவா் தாஸசத்யன், பிரசார பிரிவு மாவட்டச் செயலா் சரவணன், நிா்வாகிகள் சுகுமாா், ஜோதி, ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கடலூா்: வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி, கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் பாஜகவினா் ரத்தம் தானம் வழங்கினா்.
.