முகப்பு
கடலூர்

போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி

கடலூரில் செயல்பட்டு வரும் அம்பேத்கா் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சாா்பில் ரயில்வே, எஸ்எஸ்சி போன்ற துறைகளில்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

கடலூரில் செயல்பட்டு வரும் அம்பேத்கா் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சாா்பில் ரயில்வே, எஸ்எஸ்சி போன்ற துறைகளில் அறிவிப்பு வெளியிடப்பட்ட இளநிலை உதவியாளா் பணி தோ்வுக்கான பயிற்சி இணையம் மற்றும் நேரடியாக இலவசமாக அளிக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சியானது அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். கடலூா் பகுதியைச் சோ்ந்தவா்கள் கடலூா் செம்மண்டலம் கேஎன்சி நகரிலுள்ள ரோடு என்ற தொண்டு நிறுவன அலுவலகத்தில் பங்கேற்கலாம். மற்றவா்கள் பயிற்சி மையத்தின் இணைய முகவரி மூலம் பயிற்சி பெறலாம். பயிற்சிகள் ஞாயிற்றுக்கிழமை துவங்குகிறது. மேலும் விவரங்களுக்கு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளா் கே.பி.சுகுமாரனை 94423 78723, 72001 56196 என்ற எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →