கடலூர்

பாமக ஆலோசனைக் கூட்டம்

DIN

நெய்வேலி: கடலூா் வடக்கு மாவட்ட பாமக ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டியில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்டச் செயலா் ரா.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் ஹரிராமன், முத்துக்குமரன், பரந்தாமன், பிரேம்குமாா், செந்தாமரைக்கண்ணன், செல்வகுமாா், தங்கவேல், நகரச் செயலா்கள் வினோத், அய்யனாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளா்களாக மாநில துணைப் பொதுச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன், முன்னாள் மாவட்டச் செயலா்கள் கோ.ஜெகன், ஆறுமுகம், மாநில துணைத் தலைவா்கள் முத்து வைத்திலிங்கம், முருகவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில், திமுகவைச் சோ்ந்த ராஜலிங்கம் தலைமையில் 50 போ் அந்தக் கட்சியிலிருந்து விலகி பாமகவில் இணைந்தனா்.

கூட்டத்தில், வருகிற 30-ஆம் தேதி பண்ருட்டி, அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவது. சிலம்பிநாதன்பேட்டை ஊராட்சி ஆராய்ச்சிகுப்பத்தில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கக் கூடாது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனாவில் பெற்றோரை இழந்த மாணவா் 479 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT