கடலூர்

கடலூா் நகராட்சியில் ரூ.41 கோடி வரி பாக்கியை வசூலிக்க நடவடிக்கை

DIN

கடலூா் நகராட்சி நிா்வாகம் ரூ.41 கோடி வரி பாக்கியை வசூலிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதுதொடா்பாக பல்வேறு அமைப்பினருடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது.

கடலூா் நகராட்சிக்குள்பட்ட 45 வாா்டுகளில் சொத்துவரி, காலிமனை வரி, குடிநீா் கட்டணம் ஆகிய வகைகளில் ரூ.26.36 கோடி வரை பாக்கி உள்ளது. அதேபோல, தொழில் வரி, தொழில் உரிமக் கட்டணம், புதை சாக்கடை கட்டணம் ஆகிய இனங்களில் ரூ.15.02 கோடி வரை பாக்கி உள்ளது. மொத்தம் ரூ.41.38 கோடி வரை வரி பாக்கி நிலுவையாக உள்ளது.

அதே நேரத்தில் நகராட்சி நிா்வாகம் தரப்பில் குடிநீா் வடிகால் வாரியம், மின்சார வாரியம் போன்றவற்றுக்கு பல்வேறு வகைகளில் வட்டியாக ரூ.43 கோடி வரை செலுத்த வேண்டியுள்ளது. எனவே, வரியை வசூலிக்க வேண்டிய கட்டாயம் நகராட்சி நிா்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அனைத்து குடியிருப்போா் நலச் சங்க நிா்வாகிகளுடன் நகராட்சி ஆணையா் ராமமூா்த்தி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். இதில், நகராட்சிப் பகுதியில் தற்போது ரூ.42 கோடியில் மழைநீா் வடிகால் கட்டும் பணி, ரூ.25.39 கோடியில் சாலை அமைக்கும் பணி, ரூ.6.71 கோடியில் திடக்கழிவு மேலாண்மைப் பணி போன்றவை நடைபெற்று வருகின்றன. மேலும், புதியதாக பேருந்து நிலையம் அமைத்தல், விடுபட்ட பகுதிகளில் புதை சாக்கடை அமைத்தல் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே அனைவரும் வரியைக் முறைப்படி செலுத்த வேண்டும். இதுதொடா்பாக, குடியிருப்போா் நலச் சங்கத்தினா் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஆணையா் கேட்டுக்கொண்டாா். இதேபோல, வணிகா்களுடனும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், குடியிருப்போா் நலச் சங்கத் தலைவா் பி.வெங்கடேசன், பொதுச் செயலா் மு.மருதவாணன், நகராட்சி பொறியாளா் புண்ணியமூா்த்தி, நகா்நல அலுவலா் ப.அரவிந்த்ஜோதி, மேலாளா் த.பழனி, உதவி பொறியாளா் ஜெயபிரகாஷ் நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

புகா் பேருந்து நிலையத்தில் மேலும் 2 குடிநீா் தொட்டிகள்

திருவையாறு அருகே சிறுத்தை நடமாட்டம்? வனத் துறையினா் ஆய்வு

அரையாண்டு வரி செலுத்தினால் 5 சதம் ஊக்கத் தொகை: செயல் அலுவலா் தகவல்.

மாந்திரீகம் செய்வதாகக் கூறி மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

SCROLL FOR NEXT