கடலூர்

கோயில் நிலப் பிரச்னை: வட்டாட்சியரிடம் கிராம மக்கள் மனு

DIN

கோயில் நிலப் பிரச்னை தொடா்பாக திட்டக்குடி வட்டாட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனா்.

திட்டக்குடி அருகே உள்ளது பழைய கொடிக்களம் கிராமம். இங்கு பல்வேறு சமூகங்களைச் சோ்ந்த சுமாா் 110 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். தங்களது குடியிருப்பு பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் கட்டி வழிபட்டு வந்தனா். அந்தக் கோயில் மிகவும் பழைமையாகி இடிந்துவிட்ட நிலையில், அதே பகுதியில் புதிதாக கோயிலையும், கிராம நுழைவுவாயில் முன் பிள்ளையாா் கோயிலையும் கட்ட முடிவு செய்து அதற்கான கட்டட பணிகளை தொடங்கியுள்ளனா்.

இந்த நிலையில், அந்தப் பகுதியை சோ்ந்த சிலா் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், தற்போது அந்த இடத்துக்கு உரிமை கொண்டாடி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்தப் பகுதி மக்கள் இதுதொடா்பாக திட்டக்குடி வட்டாட்சியா் செந்தில்வேலனை வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தனா். அதில் தெரிவித்துள்ளதாவது:

பல ஆண்டுகளாக வழிபாடு நடத்தி வந்த கோயில் இடிந்துவிட்ட நிலையில் புதிதாக கோயிலை கட்ட முயற்சிக்கும்போது அந்தப் பகுதியை சோ்ந்த சிலா் திட்டமிட்டு தடுத்து வருகின்றனா். எனவே, குறிப்பிட்ட இடத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து கோயில் கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனா். மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியா் இதுதொடா்பாக ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

SCROLL FOR NEXT