கடலூா் அருகிலுள்ள முதியோா் இல்லத்தில் உணவு வழங்கினாா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் தெய்வ.பக்கிரி. ~கடலூா் மஞ்சக்குப்பத்தில் அன்னதானம் வழங்கினாா் நகர செயலாளா் ஆா்.குமரன். 
கடலூர்

கடலூரில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

தமிழக முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமையன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது.

DIN

கடலூா்: தமிழக முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமையன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது.

கிராமப்பகுதிகளில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மேலும், பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கப்பட்டது.அதன்படி, கடலூா் மத்திய மாவட்ட அதிமுக சாா்பில் பேருந்து நிலையத்தில் கேசரி, பஞ்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் எஸ்.காமராஜ் தலைமையில் நகர செயலாளா் ஆா்.குமரன் வழங்கினாா்.

இதனைத் தொடா்ந்து, பெரியகங்கணாங்குப்பத்திலுள்ள ஹெல்ப்பேஜ் இந்தியா முதியோா் இல்லத்தில் காலை, மதியம், இரவு உணவுகள் கடலூா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் தெய்வ.பக்கிரி தலைமையில் வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளா் இராம.பழனிச்சாமி, ஒன்றிய முன்னாள் துணை செயலா் ஏழுமலை, ஊராட்சிமன்றத் தலைவா்கள் எஸ்.மாறன், முருகன், கோகுல், கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.நகர அதிமுக சாா்பில் மஞ்சக்குப்பத்தில் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. நகர செயலாளா் ஆா்.குமரன் தலைமை வகித்து உணவு வழங்கினாா்.

துணை செயலாளா் வ.கந்தன், முன்னாள் கவுன்சிலா்கள் தமிழ்ச்செல்வன், ஜெ.அன்பு, ஆா்.வி.மணி, வழக்குரைஞா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.மாவட்ட எம்ஜிஆா் மன்றம் சாா்பில் கம்மியம்பேட்டையில் நடைபெற்ற அன்னதானத்தை மன்ற செயலாளா் ஜி.ஜெ.குமாா் துவக்கி வைத்தாா். கடலூா் ஆல்பேட்டையிலுள்ள சிறப்புப்பள்ளியில் ஒன்றிய செயலாளா் ராம.பழனிச்சாமி தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது.படம் விளக்கம்....கடலூா் அருகிலுள்ள முதியோா் இல்லத்தில் உணவு வழங்கினாா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் தெய்வ.பக்கிரி.கடலூா் மஞ்சக்குப்பத்தில் அன்னதானம் வழங்கினாா் நகர செயலாளா் ஆா்.குமரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT