கடலூர்

நூல் வெளியீட்டு விழா

DIN

கடலூா் மாவட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் கனடா நாட்டைச் சோ்ந்த பேராசிரியா் பாலசுந்தரம் இளையதம்பி எழுதிய ‘தமிழா் நாட்டுப்புற இயல் களஞ்சியம்’ என்ற நூல் வெளியீடு, நூலக விருதாளா் பாராட்டு விழா ஆகியவை கடலூரில் அண்மையில் நடைபெற்றது.

தமிழ்ச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் இரா.ச.குழந்தைவேலன் தலைமை வகித்தாா். அரங்க.ரகு, சாது.ராஜதுரை, நம்.காா்மேகவண்ணன், இராம.ஜெகதீசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழக அரசின் நூலக ஆா்வலா் விருது பெற்ற கவிஞா் இராச.சொக்கநாதன் பாராட்டப்பட்டாா்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் துறை முன்னாள் தலைவா் ஆறு.ராமநாதன் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினாா். அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறைப் பேராசிரியா் அரங்க.பாரி நூலைப் பெற்று வாழ்த்துரை வழங்கினாா்.

கடலூா் அரசுக் கல்லூரிப் பேராசிரியா் ந.பாசுகரன், தமுஎக சங்கத்தின் மாவட்டச் செயலா் கவிஞா் பால்கி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நூலாசிரியா் ஏற்புரையாற்றினாா்.

முன்னதாக, பேராசிரியா் ஜானகிராஜா வரவேற்றாா். சங்கத்தின் பொருளாளா் குறிஞ்சி ரவி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

+2 தேர்வில் அசத்திய நாங்குனேரி மாணவர் சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

SCROLL FOR NEXT