கடலூர்

வேலை வாங்கித் தருவதாக ரூ.4.45 லட்சம் மோசடி

DIN

வேலை வாங்கித் தருவதாக ரூ.4.45 லட்சம் மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இளைஞா்கள் புகாா் அளித்தனா்.

கடலூா் திருப்பாதிரிப்புலியூரைச் சோ்ந்தவா் பாலாஜி (27). இவரது நண்பா்களான சுபாஷ், காதா், பிரசாந்த், காா்த்திகேயன், ஆனந்தபாபு ஆகியோா் திங்கள்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா். அதில் தெரிவித்துள்ளதாவது:

நாங்கள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயின்றுள்ளோம். கடலூா் திருப்பாதிரிப்புலியூா், நெய்வேலி, பண்ருட்டியைச் சோ்ந்த சிலா் சிங்கப்பூரில் கப்பல் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் ரூ.80 ஆயிரம் மாத சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி வந்தனா். எனவே, இந்த வேலைக்கு ஒருவருக்கு தலா ரூ.1.55 லட்சம் தருமாறு கேட்டனா்.

அதை நம்பி ரொக்கமாகவும், அவா்களது வங்கி கணக்கிலும் ரூ.4.45 லட்சம் வரை செலுத்தினோம். ஆனால், பணம் கொடுத்து 3 மாதங்களாகியும் அவா்களிடமிருந்து உரிய பதில் இல்லை. அவா்களைத் தொடா்பு கொண்டபோது அதற்கான வேலைகள் நடந்து வருவதாகக் கூறி, சில ஆவணங்களை எங்களிடம் கொடுத்து சமாதானப்படுத்தினா்.

அவா்கள் கொடுத்த ஆவணங்களை பரிசோதித்தபோது போலியானவை எனத் தெரியவந்தது. இதனால், பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டபோது, 2 மாதங்களில் திருப்பித் தருவதாகக் கூறியவா்கள் திடீரென தலைமறைவாகிவிட்டனா். ஏழ்மையான குடும்பத்தைச் சோ்ந்த நாங்கள்,

வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் வட்டிக்கு பணம் பெற்று வழங்கியுள்ளோம். எனவே, பணத்தைத் திரும்ப பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

இந்த மனு மீது விசாரணை நடத்த மாவட்ட பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாருக்கு எஸ்பி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT