முகப்பு
கடலூர்

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை: வேதனையில் ஆசிரியர்கள்!

சிதம்பரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு திங்கள்கிழமை வரை கடந்த மாத ஊதியம் வழங்கப்படவில்லை.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:56 PM
சிதம்பரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு திங்கள்கிழமை வரை கடந்த மாத ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர்கள் மிகவும் வேதனையடைந்துள்ளனர்.
பகிர்:

சிதம்பரம்: சிதம்பரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு திங்கள்கிழமை வரை கடந்த மாத ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர்கள் மிகவும் வேதனையடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் உள்ள 5 அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிக்கு தமிழகஅரசால் வழங்கப்படும் கடந்த மாத ஊதியம் திங்கள்கிழமை (ஜூலை 13) வரை வழங்கப்படவில்லை. இதனால் அப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலகர்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேற்கண்ட உதவி பெறும் பள்ளிகளிலிருந்து பட்டியல் மாவட்ட கல்வி அலுவலர் மூலம் சிதம்பரம் துணை கருவூலத்திற்கு பில்கள் அனுப்பட்டுள்ளது. ஆனால் துணை கருவூல அதிகாரி ஊதியப் பட்டியலை வங்கிக்கு அனுப்பவில்லை. இதனால் திங்கள்கிழமை வரை ஆசிரியர்களுக்கு ஊதியம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை.

இதுகுறித்து சிதம்பரம் கல்வி மாவட்ட, மாவட்ட கல்வி அலுவலர் ஏ.மோகனிடம் கேட்ட போது, எங்களது அலுவலகத்திலிருந்து சம்பள பட்டியலை ஒப்புதல் வழங்கி சிதம்பரம் கருவூலத்திற்கு அனுப்பி விட்டேன் எனத் தெரிவித்தார்.

Advertisement

ஆனால் இதுநாள் வரை ஊதியம் வழங்கப்படாததால், அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், அலுவலர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments