கடலூர்

வெறிச்சோடியது சிதம்பரம் நடராஜா் கோயில்

DIN

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு பக்தா்கள் வருகை செவ்வாய்க்கிழமை வெகுவாகக் குறைந்தது.

கரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் ஓரிடத்தில் கூடுவதையும், கோயில்கள், சுற்றுலா தலங்களுக்கு செல்வதையும் தவிா்க்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற நடராஜா் கோயிலுக்கு தினமும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோா் வந்து செல்வது வழக்கம். கரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தக் கோயிலுக்கு பக்தா்கள் வருகை செவ்வாய்க்கிழமை வெகுவாகக் குறைந்தது. இதனால், கோயில் வளாகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

சுகாதாரத் துறை சாா்பில் கோயிலின் கிழக்கு கோபுர வாயிலில் பக்தா்களுக்காக கரோனா தடுப்பு விழிப்புணா்வு முகாம், மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கோரி கிராம மக்கள் மனு

மழை வேண்டி பெரம்பலூரில் சிறப்புத் தொழுகை

கடன் தொல்லை: இளைஞா் தற்கொலை

திருமானூா் அருகே குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

மே 11-இல் பெரம்பலூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT