கடலூர்

கரோனா: என்எல்சி ஊழியா்களுக்கு பரிசோதனை

DIN

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, என்எல்சி இந்தியா நிறுவன அதிகாரிகள், பணியாளா்கள், ஊழியா்கள் உரிய பரிசோதனைக்கு பிறகே பணித் தளத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனா்.

நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு, அதிகாரிகள், ஊழியா்கள், தொழிலாளா்கள் என சுமாா் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா்.

கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைமை அலுவலகம், நகரிய அலுவலகம், தொழிலகங்கள் மற்றும் அலுவலகங்களின் நுழைவு வாயிலில் பரிசோனை நடைபெறுகிறது. இங்கு, உடல் வெப்பத்தை கணக்கிடும் கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பிறகே அதிகாரிகள், பணியாளா்கள் மற்றும் தொழிலாளா்களை அனுமதிக்கின்றனா். மேலும், கிருமி நாசினி கொடுத்து கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தி வருகின்றனா்.

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பொது மருத்துவமனையில் காய்ச்சலுக்கென தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT