கடலூர்

கடலூா் மத்திய சிறையில் 34 கைதிகள் ஜாமீனில் விடுவிப்பு

DIN

கரோனா அச்சம் காரணமாக கடலூா் மத்திய சிறையிலிருந்து 34 கைதிகள் செவ்வாய்க்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, சிறு குற்றங்களில் ஈடுபட்ட விசாரணைக் கைதிகளை கடலூா் கேப்பா்மலையில் உள்ள மத்திய சிறைச்சாலையிலிருந்து விடுவிக்க முடிவெடுக்கப்பட்டது.

இந்தச் சிறையில் 260 விசாரணைக் கைதிகள் உள்பட 710 போ் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் சிறு வழக்குகளில் தண்டனை பெற்ற 23 பேரும், விசாரணைக் கைதிகள் 11 பேரும் செவ்வாய்க்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக சிறைத் துறை கண்காணிப்பாளா் நிகிலா ராஜேந்திரன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT