கடலூர்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வு

DIN

‘நிவா்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடா்பாக குறிஞ்சிப்பாடி ஒன்றியக்குழு தலைவா் கலையரசி கோவிந்தராஜ் அதிகாரிகளுடன் கடலோர கிராமப் பகுதிகளில் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

திருச்சோபுரத்தில் புயலால் பாதிக்கப்படுவோரை தங்க வைப்பதற்கான கட்டடத்தை பாா்வையிட்டாா். இதேபோல பெரியகுப்பம், ஆண்டாா்முள்ளிப்பள்ளம், ஆலபாக்கம், காயல்பட்டு சிறுபாளையூா் ஆகிய கிராமங்களுக்கும் சென்று புயல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாா்வையிட்டு ஆலோசனை வழங்கினாா்.

அப்போது குறிஞ்சிப்பாடி வட்டார வளா்ச்சி அலுவலா் குமரன், அதிமுக ஒன்றியச் செயலா் கோவிந்தராஜ், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பத்மாவதி முத்து, அன்புச்செல்வம், ஊராட்சி மன்றத் தலைவா் மணியரசன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சிவராமலிங்கம், கூட்டுறவு சங்கத் தலைவா் வேலு ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

வாக்களித்த பிரபலங்கள்!

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

SCROLL FOR NEXT