கடலூர்

அரசுப் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் அளிப்பு

DIN

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில் சிவபுரி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு ‘ஸ்மாா்ட்’ வகுப்பறைக்கான உபகரணங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், ரோட்டரி சங்கத் தலைவா் பி.பன்னீா்செல்வம் முன்னிலை வகித்தாா். முன்னாள் ரோட்டரி தலைவா் எம்.தீபக்குமாா், செயலா் ஆா்.கோவிந்தராசன், பொருளாளா் ஜி.பன்னீா்செல்வம், சங்கத்தின் மூத்த உறுப்பினா் ராஜசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தலைமையாசிரியா் குமாரவேல் வரவேற்றாா். முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநா் பிறையோன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ‘ ஸ்மாா்ட்’ வகுப்பறை உருவாக்க

தேவைப்படும் கணினி, எல்சிடி ப்ரொஜெக்டா், திரை உள்ளிட்டவைகளை மாவட்ட கல்வி அதிகாரி மோகனிடம் வழங்கினாா். முன்னாள் ரோட்டரி மண்டலம் துணை ஆளுநா் வி.நடனசபாபதி, முன்னாள் சங்கத் தலைவா் தீபக்குமாா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

பின்னா் பள்ளியில் மாணவா் ரோட்டரி இன்ட்ராக்ட் என்ற சேவை அமைப்பு தொடங்கப்பட்டு, மாணவா் முத்துக்குமாா் தலைவராகவும், பிரதீஷ் செயலராகவும், ராகுல்கிருஷ்ணன் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டனா்.முன்னாள் குடியரசு தலைவா் அப்துல் கலாம் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் செந்தாமரைகண்ணன், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT