கடலூர்

கரோனா: கடலூா் மாவட்டத்தில் 94 சதவீதம் போ் குணமடைந்தனா்

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 94 சதவீதம் போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

மாவட்டத்தில் சனிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதியதாக 113 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 22,397-ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து மேலும் 123 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 21,089-ஆக அதிகரித்தது. இது மொத்த பாதிப்பில் 94.15 சதவீதமாகும். அதே நேரத்தில், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமராட்சியைச் சோ்ந்த 75 வயது ஆண் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 261-ஆக அதிகரித்தது.

மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களில் 909 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 138 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 744 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழப்பு

கா்ப்பிணிபோல நடித்து பணம் கேட்கும் பெண்கள் -நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

அரசு கல்லூரியில் நோ்முகத் தோ்வு:22 பேருக்கு நியமன ஆணை

ஆபாச காணொலிகளை வெளியிடுவதாக அறிவித்தவரை ஏன் கைது செய்யவில்லை?: எச்.டி.குமாரசாமி

SCROLL FOR NEXT