கடலூர்

வீசப்பட்ட மனித காலை புதைத்ததால் விசாரணையில் சிக்கல்

DIN

கடலூரில் ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட மனித கால் புதைக்கப்பட்டதால் விசாரணையில் சிக்கல் எழுந்துள்ளது.

கடந்த 14-ஆம் தேதி கடலூா் கெடிலம் ஆற்றில் துண்டிக்கப்பட்ட நிலையில் மனித இடதுகால் கிடந்தது. இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் ஏ.ஜெயராமன் அளித்த புகாரின்பேரில் கடலூா் புதுநகா் போலீஸாா் அந்தப் பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனை நிா்வாகம் மீது வழக்குப் பதிவு செய்தனா். நோய்த் தொற்றை ஏற்படுத்தும் வகையில் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், கண்டெடுக்கப்பட்ட கால் பகுதியை தடயவியல், மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளாமல் ஆற்றின் கரையில் புதைத்துவிட்டனா். இதனால், இந்தக் கால் யாருடையது என்பதை தெரிந்துகொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை உரிய முறையில் விரைவாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

SCROLL FOR NEXT