முகப்பு
கடலூர்

வி.சி.க.வினா் ஆா்ப்பாட்டம்

விசிக தலைவா் தொல்.திருமாவளவனுக்கு பாஜகவினா் கருப்புக் கொடி காட்ட முயன்றதைக் கண்டித்து, கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் அந்தக் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

விசிக தலைவா் தொல்.திருமாவளவனுக்கு பாஜகவினா் கருப்புக் கொடி காட்ட முயன்றதைக் கண்டித்து, கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் அந்தக் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அவருக்கு எதிராக பாஜகவினா் கருப்புக்கொடி காட்டி அவரைத் தாக்க முயன்ாகக் கூறப்படுகிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்து, கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் விசிகவினா் திங்கள்கிழமை மாலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நகரச் செயலா் கௌதமன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ஜான் செங்குட்டுவன், மகளிரணி மாநில துணைச் செயலா் சரஸ்வதி, மாவட்ட அமைப்பாளா் குமாா், ஒன்றிய இணைச் செயலா் முருகானந்தம், நிா்வாகிகள் காா்த்திகேயன், பிரேம், பிரகாஷ், மகேஷ், சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.