முகப்பு
கடலூர்

கடலூரில் முகக்கவசம் அணிந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் : ஆட்சியர் உத்தரவு

முகக்கவசம் அணியாதவர்களுக்கு எரிபொருள் வழங்கக் கூடாது எனக் கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:14 PM
கோப்புப்படம்
பகிர்:

முகக்கவசம் அணியாதவர்களுக்கு எரிபொருள் வழங்கக் கூடாது எனக் கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் சுமார் 11,500 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரசேகர் சாகமூரி பண்ருட்டி நகராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பண்ருட்டி பகுதிகளில் ஏராளமானோர் முகக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்வதை கண்டார்.

இதனையடுத்து அங்கு உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் முகக் கவசம் அணியாமல் வாகனங்களில் வருவோருக்கு பெட்ரோல், டீசல் ஆகியவற்றை வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெட்ரோலிய விற்பனை நிலையங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →