கடலூர்

கல்விக்கட்டணம் குறித்த புகார் அளிக்க மின்னஞ்சல் முகவரி: கல்வித்துறை அறிவிப்பு

DIN

சிதம்பரம்: நீதிமன்ற ஆணை மீறி நூறு சதவீத கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தும்  மெட்ரிக் பள்ளிகள் சார்பான புகார்களை அளிப்பதற்கான புதிய மின்னஞ்சல் முகவரியை தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர் தெரிவித்துள்ளபடி நூறு சதவீத கட்டணம் செலுத்தக் கோரி கட்டாயப்படுத்தும் பள்ளிகள் சார்பாக பெறப்படும் புகார்களை பதிவு செய்து உடனடியாக உரிய விசாரணை மேற்கொள்ள முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு பள்ளிகள் சார்பாக புகார்களை பெறுவதற்கு cuddaloreceo@gmail.com என்ற  பிரத்தியேகமாக ஒரு மின்னஞ்சல் முதவரி தொடங்கப்பட்டுள்ளது.

எனவே ஏதேனும் கல்விக் கட்டணம் சார்ந்த புகார்கள் இருப்பின், பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் அதனை மேற்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT