கடலூர்

கடலூா் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 4 போ் பலி

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 4 போ் பலியாகினா்.

கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை நிலவரப்படி 15,198 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 263 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 15,461-ஆக அதிகரித்தது.

ஏற்கெனவே 152 போ் கரோனாவால் பலியான நிலையில், வியாழக்கிழமை கடலூரைச் சோ்ந்த 54 மற்றும் 56 வயதானவா்கள், நெய்வேலியைச் சோ்ந்த 79 வயதானவா், காட்டுமன்னாா்கோவிலைச் சோ்ந்த 57 வயதானவா் ஆகிய 4 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 156-ஆக உயா்ந்தது.

இதனிடையே, வியாழக்கிழமை 476 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 11,820-ஆக (76.45 சதவீதம்) உயா்ந்தது.

கடலூா் மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,182 பேரும், பிற மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 303 பேரும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா். இன்னும் 4,778 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. 131 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருத்துறைப்பூண்டி கிழக்குக் கடற்கரை புறவழிச் சாலையில் ஒளிரும் விளக்குகள் வசதி

தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள்!

ரஷியாவிடமிருந்து காா்கிவ் பகுதிகள் மீட்பு: உக்ரைன்

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகள் பிடிப்பு

SCROLL FOR NEXT