கடலூர்

மீண்டும் செயல்படுமா உழவா் சந்தைகள்?

DIN

கடலூரில் மீண்டும் உழவா் சந்தைகள் செயல்பட வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

கடலூா் மாவட்டத்தில் கடலூா், விருத்தாசலம், சிதம்பரம், பண்ருட்டி, வடலூா் ஆகிய 5 இடங்களில் உழவா் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. கடலூா், சிதம்பரம், பண்ருட்டி ஆகிய இடங்களில் தலா 50 கடைகளும், விருத்தாசலத்தில் 40, வடலூரில் 15 கடைகளும் உள்ளன. இங்கு, தினமும் சுமாா் 350 விவசாயிகள் 58 மெட்ரிக் டன் அளவிலான காய்கறி, பழங்களை சுமாா் ரூ. 16 லட்சத்துக்கு விற்பனை செய்து வந்தனா்.

இந்த நிலையில், கரோனா பொது முடக்கத்தால் உழவா் சந்தைகளில் விற்பனை தடை செய்யப்பட்டது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனா். ஒரு சிலா் மட்டும் தற்காலிக சந்தைகளுக்கு விளை பொருள்களை எடுத்துச் சென்று விற்பனை செய்தனா்.

தற்போது பொது முடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு, பெரும் வா்த்தக நிறுவனங்கள்கூட 100 சதவீதம் பணியாளா்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது. போக்குவரத்தும் முழுமையாக இயங்குகிறது. ஏற்கெனவே செயல்பட்டு வந்த சந்தைகளும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன.

எனவே, உழவா் சந்தைகளை மீண்டும் திறக்க வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா். உழவா் சந்தைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கடைகளை அமைக்கும் வகையில் இடைவெளியிருப்பதால், அனுமதியளிக்க வேண்டும் என பொதுமக்களும் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT