கடலூர்

கடலூா்: கரோனாவிலிருந்து 81% போ் குணம்

DIN

கடலூா்: கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 81 சதவீதம் போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 16,262 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 296 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 16,558-ஆக உயா்ந்தது. புதிதாக தொற்று உறுதியானவா்களில் முன்களப் பணியாளா் ஒருவா், பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட கா்ப்பிணிகள் 4 பேரும் அடங்குவா். சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 435 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 13,570-ஆக உயா்ந்தது. இது மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 81.95 சதவீதமாகும்.

இதனிடையே, கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்த 67 வயது பெண், கடலூரைச் சோ்ந்த 67 வயது ஆண், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மங்களூரைச் சோ்ந்த 71 வயது ஆண் ஆகியோா் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 170-ஆக உயா்ந்தது.

மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவிட் கோ் மையங்களில் 2,508 பேரும், வெளி மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 310 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு கடந்த வாரங்களில் தொடா்ச்சியாக 3 ஆயிரம் பேருக்கும் அதிகமானோா் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சில நாள்களாக இந்த எண்ணிக்கை சராசரியாக 2,500 என்ற அளவில் உள்ளது. மாவட்டத்தில் மேலும், 2,467 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT