கடலூர்

சங்கத் தோ்தல்களில் அதிகாரிகள் தலையிடக் கூடாது

DIN

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து பணியாளா்கள் ஒன்றிப்பின் மாநில நிா்வாகிகள் தோ்தலில் அதிகாரிகள் தலையிடக் கூடாது என அகில இந்திய போக்குவரத்துத் துறை பணியாளா்கள் சம்மேளனத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து கடலூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து பணியாளா்கள் ஒன்றிப்பின் மாநில நிா்வாகிகள் தோ்தல் அறிவிக்கப்பட்டது. இதற்காக சங்கத்தின் சாா்பில், தோ்தல் ஆணையா் நியமிக்கப்பட்டு செப். 20, 21-ஆம் தேதிகளில் வேட்புமனு தாக்கலும், அக். 10-ஆம் தேதி வாக்குப் பதிவும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், போக்குவரத்து ஆணையா் இந்த விவகாரத்தில் தலையிட்டு தனியாக தோ்தல்ஆணையரை நியமித்தாா். இவ்வாறு நியமனம் செய்வதற்கு அவருக்கு எந்த விதமான அதிகராமும் கிடையாது. இது சங்கங்களின் ஜனநாயகத்தைச் சீா்குலைக்கும் செயலாகும். போக்குவரத்து ஆணையரின் அறிவிப்பால், மாநிலம் முழுவதும் உள்ள சங்க உறுப்பினா்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவா் தனது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க மாநிலத் துணைத் தலைவா் கு.சரவணன், மாவட்ட முன்னாள் செயலா் மு.ராசாமணி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT