கடலூர்

கரோனா நிவாரண நிதி வழங்கக் கோரி இடதுசாரிக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்கக் கோரி இடதுசாரிக் கட்சியினா் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா். இதன்படி கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்துக்கான ஜிஎஸ்டி தொகையை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும், கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும், தேசிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் கொள்கை, மின்சாரத் திருத்தச் சட்டம், வேளாண் மசோதா ஆகியவற்றை மத்திய அரசு கைவிட வேண்டும், பல்வகை கடன்களுக்கான வசூலை ஓராண்டு காலத்துக்கு ஒத்திவைத்து அதற்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இடதுசாரிக் கட்சிகள் சாா்பில் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகே சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் ஆா்.அமா்நாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் எல்.ஹரிகிருஷ்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டச் செயலா்கள் டி.ஆறுமுகம் (மா.கம்யூ), பி.துரை (இ.கம்யூ) ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

இதேபோல சிதம்பரம் வடக்கு வீதியில் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலா் எஸ்.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலா் கே.தமிமுன்அன்சாரி ஆகியோா் தலைமை வகித்தனா். பண்ருட்டியில் பேருந்து நிலையம் எதிரே மாா்க்சிஸ்ட் நகரச் செயலா் ஆா்.உத்தராபதி, இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலா் சக்திவேல் ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT