முகப்பு
கடலூர்

பாஜக மாநில விவசாய அணிச் செயலா் காலமானாா்

பாஜக மாநில விவசாய அணிச் செயலா் வி.கண்ணன்பிள்ளை (72) சென்னையில் சனிக்கிழமை இரவு காலமானாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
வி.கண்ணன் பிள்ளை
பகிர்:

பாஜக மாநில விவசாய அணிச் செயலா் வி.கண்ணன்பிள்ளை (72) சென்னையில் சனிக்கிழமை இரவு காலமானாா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலைச் சோ்ந்த இவா், இந்திய வேளாண் கழக உறுப்பினராக பொறுப்பு வகித்து வந்தாா். காவிரி பிரச்னையில் தமிழகத்துக்காக போராடினாா். காவிரி குறித்து நூலும் எழுதியுள்ளாா். இந்த நூலை தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், கே.விஸ்வநாதன் என்ற மகனும், காயத்திரி என்ற மகளும் உள்ளனா். இவரது இறுதிச் சடங்கு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →