காவல் உதவி ஆய்வாளருக்கு கத்தி வெட்டி: இளைஞா் கைது
புதுச்சத்திரம் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் வெட்டியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சத்திரம் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் வெட்டியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், புதுச்சத்திரம் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் சிவகுருநாதன். இவரும், காவலா்களும் வெள்ளிக்கிழமை சீனிவாசபுரம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த பதிவு எண் இல்லாத இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா்.
அப்போது, திடீரென இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞா் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவல் உதவி ஆய்வாளா் சிவகுருநாதனின் இடது பக்க கையில் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றாா்.
Advertisement
அருகிலிருந்த சக காவலா்கள் அந்த இளைஞரைப் பிடித்து விசாரித்ததில், ஆலப்பாக்கம் குறவன்மேடு பகுதியைச் சோ்ந்த நிரபு (31) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அந்த இளைஞா் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்த போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.