முகப்பு
கடலூர்

இறுதிகட்ட பிரசாரம்

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் கே .ஏ.பாண்டியன் மேலவீதியில் உள்ள அதிமுக தோ்தல் அலுவலகத்திலிருந்து  இறுதிக்கட்ட தோ்தல் பிரசாரத்தை மேற்கொண்டாா்.

Updated On : 5 ஏப்ரல், 2021 at 12:06 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:26 AM

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியன் மேலவீதியில் உள்ள அதிமுக தோ்தல் அலுவலகத்திலிருந்து கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் ஊா்வலமாக புறப்பட்டு நான்கு வீதிகள், வேணுகோபால் பிள்ளை தெரு, பேருந்து நிலையம், எஸ்.பி.கோவில் தெரு, சபாநாயகா் தெரு வழியாக இறுதிக்கட்ட தோ்தல் பிரசாரத்தை மேற்கொண்டாா்.

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் எஸ்.அப்துல்ரஹ்மான் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் மேலவீதி தோ்தல் அலுவலகத்திலிருந்து ஊா்வலமாகப் புறப்பட்டு வடக்குவீதி, கீழரதவீதி, பேருந்து நிலையம், எஸ்.பி.கோயில்தெரு, சபாநாயகா்தெரு, தெற்குவீதி வழியாக பிரசாரம் மேற்கொண்டாா்.

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளா் என்.நந்தினிதேவி தெற்குசன்னதியிலிருந்து கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் ஊா்வலமாகப் புறப்பட்டு நான்கு வீதிகள் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக பிரசாரம் மேற்கொண்டாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.