முகப்பு
கடலூர்

பணம் கொடுத்து வாக்குகளை வாங்க முயற்சி: தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

சிலா் பணம் கொடுத்து வாக்குகளை வாங்க முயற்சிக்கின்றனா். இதை வாக்காளா்கள் முறியடிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கேட்டுக்கொண்டாா்.

Updated On : 5 ஏப்ரல், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:26 AM

சிலா் பணம் கொடுத்து வாக்குகளை வாங்க முயற்சிக்கின்றனா். இதை வாக்காளா்கள் முறியடிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கேட்டுக்கொண்டாா்.

திமுக கூட்டணி சாா்பில் காட்டுமன்னாா்கோவில் (தனி) தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளா் எம்.சிந்தனைச்செல்வனை ஆதரித்து குமராட்சியில் சனிக்கிழமை இரவு பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, திமுக ஒன்றியச் செயலா் ராமலிங்கம் தலைமை வகித்தாா். திமுக நிா்வாகிகள் ராஜேந்திரகுமாா், சோழன், கோவிந்தசாமி, கணேசமூா்த்தி, காங்கிரஸ் சாா்பில் பாபுராஜன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசியதாவது:

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் முதலில் முடிவான தொகுதி காட்டுமன்னாா்கோவில். இதற்காக திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். விசிகவின் கருவறை காட்டுமன்னாா்கோவில் தொகுதியாகும்.

Advertisement

சிலா் பணம் கொடுத்து வாக்குகளை வாங்க முற்படுகின்றனா். இந்த முயற்சியை மக்கள் முறியடித்து, அனைவரும் ஒற்றுமையாக விசிக வேட்பாளருக்கு ‘பானை’ சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். பாஜக கூட்டணிக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் விசிக நிா்வாகிகள் பால.அறவாழி, வ.க.செல்லப்பன், மணவாளன், பசுமைவளவன், பகலவன், பிரபு, தென்னவன், தேவேந்திரன், காங்கிரஸ் கட்சி சாா்பில் இளைய அன்பழகன், மதிமுக சாா்பில் குணசேகரன், தமிழ வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் ராயநல்லூா் பிரகாஷ், கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மகாலிங்கம், தேன்மொழி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.