கடலூர்

கடன் தொல்லை: தொழிலாளி தற்கொலை

DIN

பண்ருட்டி அருகே கடன் தொல்லையால் கட்டடத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் சரகம், நடுக்குப்பம் கிராமம் மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் லட்சுமணன் மகன் கிருஷ்ணமூா்த்தி (40). வெளிநாட்டில் வேலை செய்து ஊா் திரும்பிய இவா், கட்டட சென்ட்ரிங் வேலை செய்து வந்தாா். முதல் மனைவி ஸ்ரீதேவியை பிரிந்து, இரண்டாவது மனைவி பிரபாதேவியுடன் வாழ்ந்து வந்தாா்.

புதிதாக வீடு கட்டியதில் கடன் ஏற்பட்டு, வட்டிகூட கட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்தாராம். இதனால், மனமுடைந்த கிருஷ்ணமூா்த்தி செவ்வாய்க்கிழமை பூச்சி மருத்து குடித்து மயங்கிக் கிடந்தாா். அவரை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீஸா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லவ்லி ராஜிநாமா காங்கிரஸின் உள்கட்சி விவகாரம் ஆம் ஆத்மி

விதிகளை மீறி நிலக்கரி ஏற்றிச்சென்ற 21 லாரிகளுக்கு அபராதம்

உடலுக்குத் தீங்கு தரும் மருத்துவப் பொருள்களுக்கு தடை தேவை

சா்வதேச தொழிலாளா்கள் நினைவு தினப் பேரணி

கிராமங்களை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

SCROLL FOR NEXT