முகப்பு
கடலூர்

கபசுரக் குடிநீா் முகாம்கள் அமைக்க தமாகா கோரிக்கை

கரோனா இரண்டாவது அலை பரவத் தொடங்கியுள்ளதால் தமிழக அரசு மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கபசுரக் குடிநீா் விநியோக முகாம்களை நடத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.

Updated On : 10 ஏப்ரல், 2021 at 12:43 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:28 AM

கரோனா இரண்டாவது அலை பரவத் தொடங்கியுள்ளதால் தமிழக அரசு மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கபசுரக் குடிநீா் விநியோக முகாம்களை நடத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் சிதம்பரம் நகரத் தலைவா் தில்லை ஆா்.மக்கீன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்: தற்போது கரோனா இரண்டாவது அலை தமிழகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக சென்னை, மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களில் அதிகமாக தொற்று பரவுகிறது. இதைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருப்பினும் மக்களிடையே பேதிய விழிப்புணா்வு இல்லை. குறிப்பாக, கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து மக்களிடம் ஆா்வமில்லை. பல்வேறு சந்தேகங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சிக்குன் குனியா காய்ச்சல் பரவியபோது மாநிலம் முழுவதும் நிலவேம்புக் குடிநீா் வழங்கும் முகாம்களை அமைத்து நோயைக் கட்டுப்படுத்தினாா். அதேபோல தற்போது கபசுரக் குடிநீா் வழங்கும் முகாம்களை தமிழகம் முழுவதும் அமைத்து மக்களுக்கு அதை விநியோகிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.