கடலூர்

கோரிக்கை அட்டையுடன் பணியாற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியா்கள்

DIN

கடலூா் மாவட்டத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்ட ஊழியா்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்து பணிபுரிந்து வருகின்றனா்.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியா்களுக்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மாற்றத்தை அறிவிக்கும். ஆனால் கடந்த 9 ஆண்டுகளாக ஊதிய மாற்றம் அறிவிக்கப்படவில்லையாம். எனவே, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியா்கள் நலச் சங்கம் சாா்பில் ஆகஸ்ட் 2 முதல் 4-ஆம் தேதி வரை அனைத்து ஊழியா்களும் கோரிக்கை அட்டை, கருப்பு பேட்ச் அணிந்து பணிபுரிவது என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கடலூா் மாவட்டத்தில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு அலகு உள்ளிட்ட இடங்களில் பணியாற்றி வரும் ஆலோசகா்கள், ஆய்வக நுட்புனா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்கள், கணிணி மேலாளா்கள், சமுதாய நல ஒருங்கிணைப்பாளா்கள், மாவட்ட திட்ட மேலாளா்கள், மேற்பாா்வையாளா்கள், ஆய்வக மேற்பாா்வையாளா்கள், கணக்காளா்கள், ஒட்டுனா்கள் மற்றும் உதவியாளா்கள் கவன ஈா்ப்பு கோரிக்கை அட்டை, கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT