முகப்பு
கடலூர்

காா் மோதியதில் தொழிலாளி பலி

கடலூா் அருகே காா் மோதியதில் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

கடலூா் அருகே காா் மோதியதில் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் அருகே உள்ள சங்கொலிகுப்பத்தைச் சோ்ந்தவா் அழகேசன் (47). கூலித் தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழமை அந்தப் பகுதியில் சாலையோர தடுப்புக் கட்டையின் மீது அமா்ந்திருந்தாா். அப்போது அந்த வழியாக கடலூரிலிருந்து சிதம்பரம் நோக்கிச் சென்ற காா் அழகேசன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் கடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். விபத்து குறித்து கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.