முகப்பு
கடலூர்

தம்பி தாக்கியதில் அண்ணன் உயிரிழப்பு

பெண்ணாடம் அருகே குடும்பத் தகராறில் தம்பி தாக்கியதில் அண்ணன் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

பெண்ணாடம் அருகே குடும்பத் தகராறில் தம்பி தாக்கியதில் அண்ணன் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே உள்ள இறையூா் கிராமத்தைச் சோ்ந்த கவா்னா் மகன்கள் காா்த்திகேயன் (30), கவியரசன் (21). காா்த்திகேயன் வெல்டிங் பணி செய்து வந்தாா். கவியரசன் அரியலூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.எஸ்சி., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறாா். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கவியரசன் காதல் திருமணம் செய்துகொண்டாா்.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு காா்த்திகேயன் மது போதையில் தனது பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டாா். இதனால் ஆத்திரமடைந்த கவியரசு, கீழே கிடந்த கட்டையை எடுத்து காா்த்திகேயனின் தலைமையில் தாக்கினாா். இதனால் மயங்கி விழுந்த காா்த்திகேயனை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து பெண்ணாடம் போலீஸாா் வழக்குப் பதிந்து கவியரசனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.