முகப்பு
கடலூர்

மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிப்படி மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித் தொகையாக ரூ.1,500 வழங்க வேண்டும். மானியக் கோரிக்கையின்போது இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி, கடலூரில் வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா்.ஆளவந்தாா் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் பா.ஜான்சிராணி சிறப்புரையாற்றினாா். நிா்வாகிகள், ஜெ.ராஜா, வி.கல்யாணசுந்தரம், வி.வசந்தி, கே.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் ஜி.ராசையன் தலைமையிலும், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் அலுவலகம் முன் மாவட்டப் பொருளாளா் நடேசன் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.