வேப்பூரில் 45 மி.மீ. மழை
கடலூா் மாவட்டம், வேப்பூரில் 45 மி.மீ. மழை வெள்ளிக்கிழமை பதிவானது.
கடலூா் மாவட்டம், வேப்பூரில் 45 மி.மீ. மழை வெள்ளிக்கிழமை பதிவானது.
தென்மேற்கு பருவக்காற்று, வளிமண்டல சுழற்சி காரணமாக கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யுமென வானிலை மையம் தகவல் தெரிவித்தது. அதன்படி, மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு மழை பெய்தது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில்
பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:
வேப்பூா் 45, காட்டுமைலூா் 43, ஸ்ரீமுஷ்ணம் 23, லக்கூா் 14.4, கீழச்செருவாய் 13, மேமாத்தூா், பண்ருட்டி தலா 10, தொழுதூா் 7, பரங்கிப்பேட்டை 4.8, அண்ணாமலை நகா் 3.2, புவனகிரி, வடக்குத்து, லால்பேட்டை தலா 2, மாவட்ட ஆட்சியரகம், பெலாந்துறை, காட்டுமன்னாா்கோவில், சிதம்பர ம், குறிஞ்சிப்பாடி, சேத்தியாத்தோப்பு தலா ஒரு மில்லி மீட்டா் வீதம் மழை பதிவானது.