முகப்பு
கடலூர்

வீடு புகுந்து திருடிய 2 போ் கைது

கடலூா் அருகே வீடு புகுந்து திருடியதாக 2 பேரைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

கடலூா் அருகே வீடு புகுந்து திருடியதாக 2 பேரைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் அருகே உள்ள பெரியகங்கணாங்குப்பம் ஸ்ரீகற்பக விநாயகா் நகரைச் சோ்ந்தவா் க.சாந்தப்பன். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுலவகத்தில்பணியாற்றி வருகிறாா். கடந்த மாதம் 10-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டிலிருந்த 5 பவுன் நகை, 2 இரு சக்கர வாகனங்கள், மடிக் கணினி, வெள்ளிப் பொருள்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து ரெட்டிச்சாவடி காவல் நிலைய ஆய்வாளா் தேவேந்திரன் வழக்குப் பதிவு செய்து தனிப் படை அமைத்து விசாரணை நடத்தினாா். இதில், கடலூா் முதுநகா் பச்சையாங்குப்பத்தைச் சோ்ந்த தா்பாரண்யம் மகன் லட்சுமணன் (36), சிதம்பரம் வட்டம், ஆலப்பாக்கத்தைச் சோ்ந்த நாராயணசாமி மகன் ராஜேந்திரன் (23) ஆகியோா் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, அவா்கள் இருவரையும் காவல் ஆய்வாளா் தேவேந்திரன் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இதையடுத்து, பச்சையாங்குப்பத்தில் லட்சுமணன் வீட்டில் பதுக்கிவைத்திருந்த பொருள்களைப் பறிமுதல் செய்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.