முகப்பு
கடலூர்

253 சுகாதாரப் பணியாளா், செவிலியா் பணியிடங்கள் நிரப்பப்படும்: கடலூா் ஆட்சியா்

கடலூா் மாவட்டத்தில் 253 சுகாதாரப் பணியாளா், செவிலியா் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் 253 சுகாதாரப் பணியாளா், செவிலியா் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுகாதார சேவைகளை மேம்படுத்தும் வகையில், கடலூா் மாவட்டத்தில் 79 பல்நோக்கு சுகாதாரப் பணியாளா்கள் (ஆண்), 174 இடைநிலை சுகாதாரப் பணியாளா்கள் (செவிலியா்) ஆகியோா் ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தப்பட உள்ளனா். இவா்கள், ஆட்சியா் தலைமையில் செயல்படும் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் தோ்வு செய்யப்படுவா்.

இதற்கான தகுதிகள் குறித்து கடலூா் மாவட்ட வலைதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதைப் பாா்த்து தெரிந்து கொள்ளலாம்.

கரோனா தொற்றுக் காலத்தில் வெளியாதார முறையில் பணிபுரிந்த சுகாதார ஆய்வாளா்கள், செவிலியா்களின் பணியைக் கருத்தில் கொண்டு, மாவட்ட சங்கங்களின் வாயிலாகத் தோ்வு நடைபெறும் போது, அவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.